28.6 C
Gombak
Saturday, July 24, 2021

9,105 புதிய கொவிட்-19 சம்பவங்களுடன்,91 பேர் மரணம்

Must read

புத்ராஜெயா, 11 ஜூலை (பெர்னாமா)– நாட்டில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒன்பதாயிரத்திற்கும் மேல் பதிவாகிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாட்டில் இன்று கொவிட்19 நோயினால் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 961-ஆக பதிவாகி இருக்கிறது.

அதில், 455 பேருக்கு  சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா  தெரிவித்தார்.

இன்று நண்பகல் 12 மணி வரையில், 9,105 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்து 36, ஆயிரத்து 296-ஆக அதிகரித்திருக்கிறது.

இதில்,  9,087 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும், எஞ்சிய 18 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

சிலாங்கூரில் மட்டும் 4,682 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் கோலாலம்பூரில் 1,247 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும்  இப்பெருந்தொற்றினால் இன்று மட்டும் 91 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

இந்நோயிலிருந்து 5,194 பேர் குணமடைந்திருக்கும் வேளையில் 87,841 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

— பெர்னாமா

Related Articles

Video
YouTube