28.6 C
Gombak
Friday, July 23, 2021

வேதியல் பொருள் கசிவை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

Must read

கூலாய், 04 ஜூலை (பெர்னாமா)  — கூலாய், செங்காங், ஜாலான் புசார் கம்போங் பாருவில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வேதியல் பொருள் கசிவை சுவாசித்த இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

உள்நாட்டைச் சேர்ந்த அவ்விருவரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூலாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி பஹ்தியார் செலமாட் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து இரவு 8.22 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் HAZMAT எனப்படும் அபாயகர வேதியல் பொருள் சிறப்பு பிரிவைச் சார்ந்த 21 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பஹ்தியார் தெரிவித்தார்.

அந்தக் கிடங்கில் IBC எனப்படும் 30 கொள்கலன்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள ஒரு கொள்கலனிலிருந்து இந்த வேதியல் பொருள் கசிந்து ஆற்றில் கலந்தது.

அந்த வேதியல் பொருள் ஆற்றில் கலப்பதை தவிர்க்க மூன்று அடுக்கு தடுப்பு முறையை பயன்படுத்தியிருப்பதாகவும் இந்நடவடிக்கை அதிகாலை 2.33 மணியளவில் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

சிகிச்சை பெற்று வரும் அந்த இரு பெண்களின் உடல்நிலை சீராக இருப்பதாக பஹ்தியார் தெரிவித்தார்.

Related Articles

Video
YouTube