28.6 C
Gombak
Friday, July 23, 2021

கோலாலம்பூர், சிலாங்கூரில் 62 லட்சம் பேருக்கு ஆகஸ்ட் முதலாம் தேதிக்குள் முதலாவது தடுப்பூசி

Must read

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) — கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 62 லட்சம் பேருக்கும் வரும் ஆகஸ்ட் முதலாம் தேதிக்குள் குறைந்தது முதலாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும்.

அவர்களில், 35 லட்சம் பேருக்கு முதலாவது தடுப்பசி செலுத்தப்பட்டு விட்டதாக தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பாக்கார் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சிய 13 லட்சம் பேருக்கு வரும் ஜூலை 26-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட்  முதலாம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படவிருப்பதாக கைரி ஜமாலுடின் கூறினார்.

இன்று இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட  கொவிட்-19 நோய்த் தடுப்பு செயலமைப்பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கைரி அந்த தகவலைத் தெரிவித்தார்.

–பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)

Related Articles

Video
YouTube