28.6 C
Gombak
Friday, July 23, 2021

ஒலிம்பிக் போட்டி: முதன்மை செய்தியாளர் மையம் இன்று தொடக்கம்

Must read

தோக்கியோ, 13 ஜூலை (பெர்னாமா) — தோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்கம் காண 10-க்கும் குறைவான நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், விளையாட்டு போட்டிகளை சேகரிக்கும் முதன்மை செய்தியாளர் மையம் இன்று அதிகராப்பூர்வமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது.

ஜப்பானின் மிகப் பெரிய கண்காட்சி மண்டபத்தில் செயல்படும் இந்த செய்தியாளர் மையத்தில் ஆறாயிரம் செய்தியாளர்கள் பணியாற்றலாம்.

செய்தியாளர் மையத்தில் நுழைவதற்கு முன்னர், உடல் உஷ்ணம் பரிசோதிப்பது உட்பட மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் என்று, இம்மையம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தோக்கியோவில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி ஜூலை 23-ஆம் தேதி தோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.

— பெர்னாமா

Related Articles

Video
YouTube